விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பட்ஜெட் கன்னா பின்னாவென்று எகிறிக்கொண்டே போவதால் தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.  இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு மட்டும் 22 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ள்து. ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.18 கோடி சம்பளம். இவர்கள் இருவரின் சம்பளம் மட்டுமே 40 கோடி ரூபாய் ஆகிவிட்டதால் மற்ற டெக்னீஷியன்கள் செலவு எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்த தயாரிப்பு நிறுவனமான ஐங்கரனுக்கு தலையே சுற்றிவிட்டதாக கூறுகிறார்கள்.

படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.100 கோடியை நெறுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.  முதலில் ரூ.70 கோடியில் படத்தை முடித்துவிடலாம் என கூறிய முருகதாஸ் தற்போது விஜய்யின் இரட்டை வேட கிராபிக்ஸ் காட்சிகள் செலவையும்  சேர்த்து பட்ஜெட் ரு.100 கோடி வரை ஆகும் என கூறியுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியாகியுள்ளது.

மேலும் விஜய்யை வைத்து இரண்டாவது படம் எடுக்கும் இயக்குனர்கள் பலர் வெற்றி பெறவில்லை என்பது கடந்த கால வரலாறு. கில்லிக்கு பிறகு விஜய்யை வைத்து தரணி எடுத்த குருவி, போக்கிரிக்கு பிறகு பிரபுதேவா எடுத்த வில்லு, காதலுக்கு மரியாதை படத்திற்கு பிறகு பாசில் எடுத்த கண்ணுக்குள் நிலவு, ஆகிய படங்களில் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த புள்ளி விபரங்களை தயாரிப்பாளரிடம் ஒரு நண்பர் நீட்டியுள்ளதால் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

ஆனாலும் விஜய் படங்களுக்கு இருக்கும் ஓபனிங், வெளிநாட்டு மற்றும் வெளிமாநில உரிமை, சாட்டிலைட் உரிமை என எல்லாவற்றையும் சேர்த்தால் கண்டிப்பாக போட்ட முதலீட்டை தேற்றிவிடலாம் என்று ஒருசிலர் ஆறுதல் கூறியுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் பெருங்குழப்பத்தில் இருக்கிறது.

Leave a Reply