shadow

ரசிகர்களுடன் போட்டோஷூட். வேஷ்டியில் கலக்கிய இளையதளபதி


இளையதளபதி விஜய் தற்போது ‘தளபதி 61’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக உள்ளார். தற்போதைய சென்னை படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக செல்லவுள்ளார்.

இந்த நிலையில் இன்று ஈசிஆர் சாலையில் உள்ள தனது வீட்டில் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து கொள்கிறார். இதற்காக இளையதளபதியின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் குவிந்தனர்

வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் அட்டகாசமாக சற்று முன்னர் வந்த விஜய், இன்னும் சிறிது நேரத்தில் ரசிகர்களுடன் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அவர் ரசிகர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply