shadow

மீண்டும் லைகா தயாரிப்பில் விஜய்?

vijay-atleeலைகா நிறுவனம் தயாரித்த முதல் படமான ‘கத்தி’ பல்வேறு பிரச்சனைகளை தாண்டி வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. அதன்பின்னர் ரஜினியின் ‘2.0’, கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ உள்ளிட்ட பல படங்களை லைகா தயாரித்து வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தை லைகா தயாரிக்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படும் ‘விஜய் 61’ படத்தை முதலில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் முடிவடையவுள்ளது. விரைவில் ராஜமுந்திரியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இதனையடுத்து படக்குழுவினர் பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply