shadow

‘வாரிசு’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக வெளியான போஸ்டர்

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்ட தற்போது ‘வாரிசு’ படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பொங்கல் தினத்தில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகும் என உறுதி செய்துள்ளனர்.

ஒரு காரின் மீது உட்கார்ந்துகொண்டு கையில் டீ கிளாஸ் வைத்திருப்பது போன்று விஜய் இருக்கும் இந்த புதிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இன்று வெளியாகிய போஸ்டரின் மூலம் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் மோதுகிறது.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்துள்ளனர்.