shadow

‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டர்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய் நடித்து முடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் நாளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘வாரிசு’ படக்குழுவினர் சற்றுமுன் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா அட்டகாசமான உள்ளனர்.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.