கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்?
vijay
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இருப்பினும் விஜய்யின் அடுத்த படம் குறித்த எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

விஜய்யை இயக்க எஸ்.ஜே.சூர்யா, மோகன் ராஜா, உள்பட சுமார் 10 முன்னணி இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த பட்டியலில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ளார்.

சமீபத்தில் விஜய்யை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ், ஒரு அதிரடி ஆக்சன் கதையை கூறியதாகவும், இந்த கதை விஜய்யை மிகவும் கவர்ந்ததால், விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது ‘இறவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, கருணாகரன், அஞ்சலி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.