‘தெறி’யில் இருந்து வெளியேறினார் விஜய்.

‘தெறி’யில் இருந்து வெளியேறினார் விஜய்.

theri-songஇளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்த ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. வெளிநாட்டு டூர் செல்ல வேண்டியதிருந்ததால் விஜய் முதலில் இந்த படத்திற்கான டப்பிங் பணியை முடிக்க முடிவு செய்து கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் டப்பிங் செய்து, அவருடைய பாகத்திற்கான டப்பிங் பணியை முற்றிலும் முடிந்துவிட்டார். இதனால் ‘தெறி’யை பொறுத்தவரை அவருடைய பணி முடிந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த வாரம் முதல் சமந்தா, எமிஜாக்சன், உள்பட மற்ற கேரக்டர்களுக்கான டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அதில் படக்குழுவினர் முழுவதும் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும், ஆனால் அந்த சமயத்தில் விஜய் வெளிநாட்டில் இருக்கும் நிலை இருப்பதால் அவர் இல்லாமலேயே இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

theri1_2698488f theri theri-marriage theri_144957202800 theri2 theri3 theri2 theri

Leave a Reply