பேருந்தில் பயணம் செய்த விஜய் ரசிகரின் அதிரடி நடவடிக்கை

பேருந்தில் பயணம் செய்த விஜய் ரசிகரின் அதிரடி நடவடிக்கை

கோலிவுட் திரையுலகம் திருட்டு டிவிடிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் படம் வெளியான மறுநாளே திருட்டு டிவிடி மூலமும், இணையதளங்கள் மூலமும் வெளிவந்து தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது ரசிகர்களும் திருட்டு டிவிடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்து கோலிவுட் திரையுலகினர்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஓமலூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் ‘பைரவா’ படம் ஒளிபரப்பானதை அந்த பேருந்தில் பயணம் செய்த விஜய் ரசிகர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அப்பகுதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேருந்தின் அடையாளம் குறித்தும், அந்த பேருந்து சென்று கொண்டிருக்கும் இடம் குறித்தும் தகவல் கொடுத்தார். உடனடியாக செயல்பட்ட அந்த பகுதி விஜய் ரசிகர்கள் பேருந்தை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். தாங்களாகவே அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பைரவா படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.