விஜய் கொடுத்த உதவித்தொகையை அஜித் ரசிகருக்கு கொடுத்த விஜய் ரசிகர்

பரபரப்பு தகவல்

தளபதி விஜய் ஏற்கனவே ரூ 1.30 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு நிதி கொடுத்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வறுமையில் இருக்கும் தனது ரசிகர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வருகிறார் என்பதும் தெரிந்ததே

ஏராளமான ரசிகர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் அனுப்பிய ரூபாய் 5000 உதவித்தொகையை மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகரான நாகராஜ் என்பவர் தனது நண்பரும் அஜித் ரசிகரான சசிகுமார் என்பவருக்கு வழங்கியுள்ளார்

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அஜித் ரசிகர் வறுமையில் வாடுவதாகவும் எனவே தளபதி கொடுத்த பணத்தை அவருக்கு கொடுத்து உதவி இருப்பதாகவும் விஜய் ரசிகர் நாகராஜ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விஜய் தனது ரசிகர்களுக்காக கொடுத்த பணம் அஜித் ரசிகர்களுக்கும் போய் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.