shadow

விஜய் 60′ படக்குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்
vijay birthday 1
இளையதளபதி விஜய் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாட குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக நேற்று ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தது. மேலும் தற்போது ‘விஜய் 60′ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய் இன்றைய பிற்நத நாளை முன்னிட்டு சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அனைத்து வதந்திகளும் பொய்க்கும் வண்ணம் இன்று விஜய் தனது பிறந்த நாளை விஜய் 60’ படக்குழுவினர்களுடன் மிக எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார்.

பட்டுவேஷ்டி, பட்டு சட்டை என அசத்தலான காஸ்ட்யூமில் இருந்த விஜய், படக்குழுவினர்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி கேக் வெட்டினார். இந்த பிறந்த நாள் விழாவில் ‘விஜய் 60’ நாயகி கீர்த்திசுரேஷ் பட்டுசேலை அணிந்து வந்திருந்தார். மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், காமெடி நடிகர் சதீஷ், இயக்குனர் பரதன் உள்பட படக்குழுவினர்கள் அனைவரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வரும் 25ஆம் தேதி வரை ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.  அதன் பின்னர் ஒருசில நாட்கள் இடைவெளியை அடுத்து விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ளனர். அங்கு இரண்டு பாடல் காட்சிகளும் ஒரு ஸ்டண்ட் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளன.vijay birthday 2

vijay birthday 3

Leave a Reply