shadow

இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்திய விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவர்களுடன், விஜய் பைக்கில் ஊர்வலமாக செல்வது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

அந்த காட்சியை படமாக்கும்போது பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் இந்த காட்சியின் புகைப்படத்தையும், வீடியோவையை ரசிகர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் இந்த படத்தை பிரமாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply