விஜய்யுடன் மீண்டும் மோத முடிவு செய்துவிட்ட விஷால்.

விஜய்யுடன் மீண்டும் மோத முடிவு செய்துவிட்ட விஷால்.
vijay and vishal
இளையதளபதி விஜய்க்கும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கும் அவ்வப்போது பனிப்போர் நடந்து வருவதாக கூறுவதுண்டு. சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் கூட விஜய், சரத்குமார் அணிக்குத்தான் ஆதரவு கொடுத்தார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த பனிப்போர் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘தெறி’ படத்தை வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சோலோவாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த கலைப்புலி எஸ்.தாணுவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் விஷால் நடித்து வரும் ‘மருது’ படமும் அதே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் இராஜபாளையம் பகுதியில் கிளைமாக்ஸ் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளை தொடங்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல்14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, விஷால் நடித்த பூஜை நெருக்கு நேர் மோதிய நிலையில் தற்போது மீண்டும் இரு நடிகர்களின் படங்கள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.