shadow

ஒரே நாளில் விஜய்-சிம்பு மோதலா?

vijay and simbuசிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல்கட்டபடப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பொங்கலுக்கு ஏற்கனவே இளையதளபதி விஜய்யின் ‘விஜய் 60’ படத்தை வெளியிட விஜயா புரடொக்ஷன்ஸ் திட்டமிட்டுள்ள நிலையில் சிம்புவின் இந்த படமும் பொங்கலை குறி வைத்துள்ளதால் ஒரே நாளில் விஜய்-சிம்பு படங்கள் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் விஜய்யும், சிம்புவும் நெருக்கமானவர்கள் என்பதால் கடைசி நேரத்தில் இந்தமோதல் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸ் ஆக விஜய் செய்த உதவியை சிம்பு மறக்கவில்லை என்றும் தயாரிப்பாளரிடம் அவர் கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற கோரிக்கை வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒன்பது பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளார். மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் மற்றும் படத்தொகுப்பாளராக ரூபன் பணியாற்றி வருகின்றனர்.

Leave a Reply