shadow

venue-for-vijay-amala-wedding

 

மதராசப்பட்டணம், தாண்டவம், தலைவா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய்- நடிகை அமலாபால் திருமணம் வரும் ஜூன் 12ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் மற்றும் அமலா பால் ஆகிய இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்ததில் இருந்தே இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அது பின்னர் காதலாக மாறி தற்போது திருமணம் வரை வந்துள்ளது.

இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரின் பெற்றோர்களும் சம்மதித்துவிட்டனர். வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக இன்று விஜய் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

விஜய் தற்போது சைவம் படத்தின் ரீரிக்கார்டிங் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் விஜய்-அமலாபால் இருவரும் சேர்ந்து பிரஸ்மீட் வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply