shadow

vijay and amalapaulஇளையதளபதி விஜய்யுடன் அமலாபால் நடித்த ஒரே படம் ‘தலைவா’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அமலாபால் கணவர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய்-அமலாபால் இருவரும் மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இம்முறை இருவரும் நடிப்பது விளம்பரப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய விளம்பர படம் ஒன்றை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த விளம்பர படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘தலைவா’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அடைந்ததாக கூறிய அமலாபால், மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், தற்போது பிரியதர்ஷன் இயக்கும் படம் ஒன்றை தயாரித்து வருவதாகவும் கூறினார்.

Leave a Reply