நெல்லை தமிழ் பேசும் மருத்துவ கல்லூரி மாணவராக விஜய்?

நெல்லை தமிழ் பேசும் மருத்துவ கல்லூரி மாணவராக விஜய்?

vijay60இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தில் விஜய் நெல்லை தமிழ் பேசி நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நெல்லையில் உள்ள மருத்துவ கல்லூரியில் விஜய் மாணவராகவும், கீர்த்திசுரேஷ் மாணவியாகவும் நடித்து வருவதாகவும், இந்த கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றை தீர்க்க சென்னை வரும் விஜய்க்கு ஏற்படும் திடுக்கிடும் திருப்பம்தான் கதை என்று கூறப்படுகிறது.

விஜய் இதுவரை எந்த படத்திலும் நெல்லை தமிழ் பேசி நடிக்கவில்லை. எனவே கமல்ஹாசனுக்கு பாபநாசம் படத்திற்காக நெல்லை தமிழ் பயிற்சி கொடுத்தவர் விஜய்க்கும் பயிற்சி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் மட்டுமின்றி இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராகி டேனியல் பாலாஜியும் நெல்லைத்தமிழ் பேசி நடிக்கின்றாராம்.

கீர்த்திசுரேஷ், சதீஷ், பாப்ரிகோஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் இந்த பிரமாண்டமான படத்தை அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கி வருகிறார்.

Leave a Reply