shadow

james-bond-007-daniel-craig-face copy

ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரை போல தமிழில் நவீன டெக்னாலஜி உதவியுடன் துப்பறியும் சூப்பர் ஹீரோ கதை ஒன்றை தான் தயார் செய்து வைத்திருப்பதாகவும், அந்த கதையை விஜய் நடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே எடுப்பேன் என்றும் இயக்குனர் திரு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தீராத விளையாட்டு பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு தற்போது
‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை இயக்கி முடித்துவிட்டார். இதையடுத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும், மிகவும் ரிச்சாக ஹாலிவுட் படத்திற்கு இணையாக அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறும் திரு, இந்த படத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே இயக்குவேன் என்றும் வேறு எந்த நடிகரும் அந்த கேரக்டருக்கு பொருந்த மாட்டார் என்பதால், அவர் நடிக்கவில்லை என்றால் வேறு கதையைத்தான் தேர்வு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்தடுத்து சிம்புதேவன் உள்பட பல இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். எனவே திரு கனவு பலிக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply