shadow

விஜய்யின் ‘மெர்சல்’ டைட்டில். ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 61’ படத்திற்கு ‘மெர்சல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட்லுக் நேற்று இரவு இணையதளங்களில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலில் விஜய்க்கு வைக்கப்பட்டிருந்த இளையதளபதி தூக்கப்பட்டு அதற்கு பதிலாக ‘தளபதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த டைட்டிலின் எழுத்துக்கள் ஜல்லிக்காட்டு காளை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டிலை தலைகீழாக் பார்த்தால் ‘VIJAY’ என்ற ஆங்கில எழுத்துக்கள் தெரியும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் விஜய் இன்று தனது 43வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு கோலிவுட் திரையுலகினர் வாழ்த்துக்களை நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறி வருகின்றனர்.

Leave a Reply