‘விஜய் 60’ படத்தின் இசையமைப்பாளராகும் ‘கபாலி’ இசையமைப்பாளர்

‘விஜய் 60’ படத்தின் இசையமைப்பாளராகும் ‘கபாலி’ இசையமைப்பாளர்

vijay60இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் அதன் பின்னர் பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே உள்பட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் தற்போது ‘விஜய் 60’ படத்திற்கும் அவரே இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தனுஷ் நடிக்கவுள்ள ‘வடசென்னை’ படத்திற்கு இவர் இசையமைக்கவுள்ளார். ஒரே நேரத்தில் மூன்று பெரிய நடிகர்களுக்கு இசையமைப்பாளராக குறுகிய காலத்தில் சந்தோஷ் நாராயணன் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மதி என்றும், எடிட்டர் ப்ரவீண் என்றும், தயாரிப்பு நிறுவனம் விஜயா புரடொக்ஷன்ஸ் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பணிபுரியவுள்ள முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் விரைவில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என கூற

Leave a Reply