shadow

‘விஜய் 60’ படத்தின் டைட்டில் ஒரே ஒரு வார்த்தையா?

vijay60இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியபோகிறது., இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டதாகவும் மீதி 30% அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று கூறப்படும் நிலையில் இன்னும் இந்த படத்தின் டைட்டில் முடிவாகவில்லை

‘எங்க வீட்டு பிள்ளை’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, உங்க வீட்டு பிள்ளை’ என இணையவாசிகள் ஆளாளுக்கு ஒரு டைட்டில்களை கற்பனையாகவும், வதந்தியாகவும் பரப்பி வரும் நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்கே படக்குழுவினர்களுக்கு நேரம் சரியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் நிச்சயம் ஒரே ஒரு வார்த்தையில்தான் இருக்குமாம். விஜய் நடித்த முந்தைய படங்களின் டைட்டில்களான கத்தி, துப்பாக்கி, தெறி, ஜில்லா, புலி வரிசையில் ஒரே வார்த்தை உள்ள டைட்டில் என்று கூறப்படுகிறது. அந்த ஒரு வார்த்தை என்ன என்பதை படக்குழுவினர் எப்போது அறிவிப்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது

Leave a Reply