shadow

ரசிகர்களுக்கு விஜய் தரும் பிறந்தநாள் பரிசு இதுதான்…
vijay60
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது அவர் 60வது படத்தில் நடித்து வருகிறார். ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

இந்நிலையில் விஜய் தனது 42வது பிறந்த நாளை வரும் ஜூன் 22ஆம் தேதி சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். இந்த பிறந்தநாளின் போது தனது ரசிகர்களுக்கு தரும் சிறப்பு பரிசாக ‘விஜய் 60’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

Leave a Reply