இலங்கை வடக்கு மாகாணத்தில் கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் யாழ்ப்பாண ராணுவ படைப்பிரிவுக்கு தலைமை வகித்த மேஜர் ஜெனரல் சந்தரஸ்ரீ, வடக்கு மாகாண ஆளுநராக இருக்கிறார். விக்னேஸ்வரனுக்கு இவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், கொழும்புவில் இக்கூட்டணியின் தலைவர் சம்பந்தனுக்கும் அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே இப்பிரச்னை பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அதில், விக்னேஸ்வரனுக்கு ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கொழும்புவில் திங்கட்கிழமை விழாவில் பதவியேற்பு விழா நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி உறுப்பினர்கள், 11ம் தேதி யாழ்ப்பாணத்தில் பதவியேற்க உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.