shadow

இந்திரா காந்தி கேரக்டரில் நடிக்கும் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த நடிகை

பாலிவுட் திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அவ்வபோது தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகவுள்ளது

இதில் இந்திராகாந்தி கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தை பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ் எழுதிய நூல் அடிப்படையில் தயாரிக்கப்படவுள்ளது

பிரபல கவர்ச்சி நடிகை மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை வித்யா பாலன் இந்த நூலினை திரைப்படம் ஆக தயாரிப்பதற்கான உரிமையை ராய் கபூர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சகாரிகா கோஷிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திராவை வெள்ளித்திரையில் பார்ப்பதற்காக பரவசத்துடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply