shadow

காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம். திருமாவளவனின் திடீர் ஆதரவு

thirumavalavan

 

புதுச்சேரி நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் புதுவை முதல்வருமான நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி முதல்வருக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”புதுச்சேரியில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்தவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். தங்கள் நிலைபாட்டை இடதுசாரிகளிடம் கூறியபோது எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவு தமிழகத்துக்குப் பொருந்தாது. முதல்வர் நாராயணசாமியை ஆதரித்து கட்சித் தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்வார்” என்று கூறியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக புதுவை மாநில எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் காங்கிரஸூக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply