shadow

ரஜினியின் அடுத்த ஜோடி வித்யாபாலன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ‘கபாலி’ இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த் படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் உறுதி செய்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால், வித்யாபாலன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘கபாலி’ படத்திற்காக இயக்குனர் ரஞ்சித், வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த சமயத்தில் வித்யாபாலனின் தேதிகல் ஒத்துவரவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் சான்ஸை மிஸ் செய்த வித்யாபாலனுக்கு மிண்டும் அந்த வாய்ப்பு தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply