shadow

விஜயகாந்த் டைட்டிலை கைப்பற்றிய விஜய் படம்
vijay59
கடந்த 1984ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சூப்பர் ஹிட் படம் ‘வெற்றி’. கேப்டன் விஜயகாந்த், விஜி, பண்டரிபாய் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை பழம்பெரும் நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரித்திருந்தார். இந்நிலையில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இந்த படத்தின் டைட்டிலை மகன் விஜய் தனது அடுத்த படத்தில் உபயோகப்படுத்த போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்கு முதலில் ‘மூன்று முகம்’ என்று முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ‘வெற்றி’ என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் என்றால் வெற்றி என்றுதான் அர்த்தம். எனவே வெற்றி என்ற டைட்டில் விஜய் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதுகின்றனர்.

 விஜய், பிரபு, சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், ராதிகா, கே.எஸ்.ரவிகுமார், நான் கடவுள்’ ராஜேந்திரன், அழகம்பெருமாள், காளி வெங்கட், மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்தில் சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படம் 2016ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply