shadow

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அவர்கள் கடந்த வாரம் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பார்த்து தனது டுவிட்டரில் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ் மற்றும் தெலுங்கில் டுவீட் செய்துள்ளார். அவர் தனது தமிழ் டுவீட்டில் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அவர்கள் ஒரு தமிழ் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளது அந்த படத்தின் குழுவினர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை அளிப்பதாக உள்ளதாக டுவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply