வட இந்தியாவில் ‘புலி’யை ரிலீஸ் செய்யும் பிரபல டிவி நிறுவனம்
தென்னிந்தியாவின் சன் நெட்வோர்க் போல வட இந்தியாவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனம் ‘வயாகாம் 18’ (Viacom18) என்ற நிறுவனம். இந்த நிறுவனம் புகழ்பெற்ற திரைப்படங்களை விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் முதன்முதலாக தென்னிந்திய திரைப்படம் ஒன்றை இந்த நிறுவனம் வட இந்தியாவில் வெளியிட உள்ளதாகவும், அந்த படம் இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில், இந்தியிலும் அதே தேதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டு அதற்கான டப்பிங் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வட இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி நடித்திருப்பதால், இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமையை பெற கடும்போட்டி இருந்தது.
இந்நிலையில் ‘புலி’ படத்தின் இந்தி உரிமையை ‘வயாகாம் 18’ தொலைக்காட்சி நிறுவனம் பெரும் தொகைக்கு பெற்றுள்ளதாகவும், வட மாநிலங்களில் பெருவாரியான தியேட்டர்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், ரோபோ சங்கர், வித்யூலேகா, தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.