மேல்முறையீடு செய்கிறார் வெற்றிவேல் எம்.எல்.ஏ? பொதுகுழுவுக்கு தடை வருமா?

மேல்முறையீடு செய்கிறார் வெற்றிவேல் எம்.எல்.ஏ? பொதுகுழுவுக்கு தடை வருமா?

அதிமுக பொதுக்குழுவை பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். பொதுச்செயலாளரின் அனுமதியின்றி கூட்டப்பட்டும் பொதுகுழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி வெற்றிவேல் எம்எல்ஏ தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரணை செய்ய அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டார்

இந்த நிலையில் அவசர வழக்காக இந்த மனுவை விசாரிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் முறையிட உயர்நீதிமன்றம் வெற்றிவேல் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாலை 4 மணிக்கு இந்த மனு மீது விசாரணை நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விசாரணையின்போது பொதுக்குழுவிற்கு தடையுத்தரவு வருமா? என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.