shadow

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 54

தமிழ் உள்பட முன்னணி மொழிகள் அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து திரையுலகில் இருந்து விலகினார். இருப்பினும் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படம் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன ஸ்ரீதேவி, அதன் பின்னர் புலி, மாம் போன்ற படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் குடும்ப நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனிகபூர், மகள் குஷிகபூருடன் துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக உயிர் பிரிந்தது. ஸ்ரீதேவியின் மரணம் அவரது ரசிகர்களையும் திரையுலகினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply