டோக்கியோவில் பான் பசிபிக் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. 2009க்கு பின்னர் முதல் முறையாக களம் இறங்கியுள்ள வீனஸ் வில்லியம்ஸ், 2வது சுற்று போட்டியில், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரன்காவுடன் மோதினார். இதில் 6,2, 6,4 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேற்று 3வது சுற்று போட்டி நடந்தது. இதில் ருமேனியா வீராங்கனை சிமோனாஹலெப்பும், வீனஸ் வில்லியம்சும் மோதினர். இந்த போட்டியில், இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதினர். இதில் முதல் செட்டில் 6,4 என்ற செட் கணக்கில் சிமோனாஹலெப் வெற்றி பெற்றார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட வீனஸ், தனது வியூகங்களை மாற்றிக் கொண்டு ஆடினார். இதனால் அடுத்த 2 செட்களும் அவர் வசமானது. இப்போட்டியில் 4,6, 7,5, 6,3 என்ற செட் கணக்கில் வீனஸ் வெற்றி பெற்றார்.

Leave a Reply