shadow

ஸ்ரீதேவி, பூதேவியுடன் விமானத்தில் பயணம் செய்த வெங்கடாசலபதி சிலை

statueபயணிகளோடு பயணிகளாக வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய கடவுள்களின் சிலைகள் பயணம் செய்த பரபரப்பான சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெல்லாஸ் என்ற நகரில் ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதற்காக வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவி பஞ்சலோக சிலைகள் அமெரிக்காவுக்கு பார்சலில் அனுப்பப்பட்டது. வாஷிங்டனில் உள்ள கோயிலில், மூன்று சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர், டெல்லாஸ் நகருக்கு மீண்டும் அனுப்பும் போது அந்த சிலைகளை பார்சலில் அனுப்ப மணமில்லாத பக்தர்கள், டெல்லாஸ் நகருக்கு செல்லும் விமானத்தில், வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவி பெயரில் மூன்று விமான டிக்கெட்டுகளை எடுத்து, மூன்று சிலைகளையும், பயணிகளின் மத்தியில் மூன்று இருக்கையில் வைத்து டெல்லாஸ் கொண்டு சென்றனர்.

தங்களுடன் கடவுள்களின் சிலைகளும் விமானத்தில் பயணம் செய்வதை அறிந்த மற்ற பயணிகள் பரவசத்தோடு பக்தியுடன் அந்த சிலைகளை வணங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply