shadow

இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா

பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வழங்குகிறது.

இதை பெற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் யுஏஇ செல்லலாம்;

தங்கலாம்;

கல்வி கற்கலாம்;

தடையின்றி வணிகம் செய்யலாம்.

இந்த சிறப்புமிகு விசாவை தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு யுஏஇ வழங்கியுள்ளது.

ஏற்கெனவே நடிகர் நாசர், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.