நாம் கிட்டத்தட்ட காஷ்மீரை இழந்துவிட்டோம். ப.சிதம்பரம் பேச்சுக்கு வெங்கையா நாயுடு கண்டனம்

நாம் கிட்டத்தட்ட காஷ்மீரை இழந்துவிட்டோம். ப.சிதம்பரம் பேச்சுக்கு வெங்கையா நாயுடு கண்டனம்

காஷ்மீர் விவகாரம் குறித்து பெரிய தலைவர்கள் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்து நாட்டின் இறையாண்மைகே பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் காஷ்மீர் குறித்து சமீபத்தில் பேசிய, ‘“காஷ்மீரில் வன்முறையை ஒடுக்குவதற்கு படைகளை மத்திய அரசு மூர்க்கத்தனமாக கையாண்ட விதம் நாம் கிட்டத்தட்ட காஷ்மீரை இழந்துவிட்டது போன்ற உணர்வை தருகிறது. அங்கு நிலைமையை மத்திய அரசு சரி செய்யாவிட்டால் இன்னும் மோசமாகி விடும்” என்று கூறியிருந்தார்

ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ஐதராபாத்தில் விழா ஒன்றில் பேசியபோது, ‘ப.சிதம்பரத்தின் கருத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பொறுப்பற்றது. தேச விரோதமானது. அதிர்ச்சி தருவதாகவும் அமைந்து உள்ளது. அதுவும் மத்திய உள்துறை மந்திரியாக இருந்த ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வெளி வருவது வேதனையானது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை முழுமையாக அறிந்த ஒருவர் இதுபோல் பேசுவதும் அழகல்ல.

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்டும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியும் செய்து வரும் பாகிஸ்தானின் காதுகளுக்கு ப.சிதம்பரத்தின் பேச்சு இனிய இசையாகத்தான் இருக்கும்.

காஷ்மீரில் அமைதியின்மைக்கும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக ஆக்குவதற்கு எல்லாவழிகளிலும் முயற்சித்து வரும் பாகிஸ்தானுக்கு ப.சிதம்பரத்தின் பேச்சு ஊக்கம் தருவதாகவும் அமைந்து இருக்கிறது.

Leave a Reply