shadow

வெங்கட்பிரபுவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் அவரது உதவியாளர் சரவணன் ராஜன் இயக்கும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை கடந்த சில நாட்களாக தனது டுவிட்டரில் அறிவித்து வந்த வெங்கட்பிரபு தற்போது இந்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு வெங்கட்பிரபு ‘ ‘R.K-நகர்’ என்று முடிவு செய்துள்ளார். சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்ட தொகுதிதான் ‘R.K-நகர் என்பதும், இந்த தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த படத்திற்கு ‘R.K-நகர் என்று வைக்கப்பட்டுள்ளதால் இந்த படம் அரசியல் நையாண்டி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். நடிகர் பிரேம்ஜி இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ், இசையமைப்பாளர் பிரேம்ஜி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல், கலை இயக்குனர் விதேஷ் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் ஆகியோர்கள் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply