shadow

எனக்கும் பாஜகவுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. வெங்கையா நாயுடு

சமீபத்தில் நடைபெற்ற துணை குடியரசு தலைர் தேர்தலில் வெற்றி பெற்று 15வது துணை குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் வெங்கைய்யா நாயுடு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்

துணை குடியரசு தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் , துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வெங்கய்யா நாயுடு இன்று காலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்று சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”நான் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறேன். நான் இப்போது பாஜக கட்சியில் உறுப்பினராக இல்லை. எனவே எனக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவரை அதிகாரிகளும், பாஜகவினரும் வரவேற்றனர். அவரது வருகையை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Leave a Reply