ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: வேல்முருகன் போராட்டம்!

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று போராட்டம் நடத்தவுள்ளார்.

தமிழக சட்டசபையில் ஏற்பட்ட நீட் விலக்கு மசோதாவை நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். இதனை கண்டித்து இன்று தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தவுள்ளார்.

இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அவர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.