தொடரும் தற்கொலை: வேலூர் மாணவியும் தூக்கில் தொங்கினார்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை. காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை. நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே நீட்தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் நீட் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.