மதுரையில் இருந்து சென்னை வரும் வாகனங்களுக்கு திடீர் சிக்கல்: 4 கிமீ தூரம் காத்திருப்பதாக தகவல்

மதுரையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த வாகனங்கள் சுமார் 4 கிலோ மீட்டர் நீளம் வரை காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் மதுரை சென்னை சாலையில் செங்கல்பட்டு அருகே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து மீது அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது

இதனை விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் காத்திருந்தன

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது