சென்னை ஈசிஆர் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறதா?

சென்னை ஈசிஆர் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறதா?

மகாபலிபுரம் அருகே நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது

தற்போது புயல் கரையை கடந்து விட்ட நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் தற்போது வாகனங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து அனைத்து வாகனங்களும் கிழக்கு கடற்கரை சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றன.

சென்னையிலுள்ள ஒரு சில பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் அந்த மரங்களை அகற்றும் பணியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.