வாகனப்பதிவு, புதுப்பித்தல் கட்டணம் பல மடங்கு உயர்வு: அதிர்ச்சியில் வாகன உரிமையாளர்கள்!

வாகன பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் இதோ:

15 வருடங்களுக்கு மேலான கார் வைத்திருப்பவர்கள் வாகன பதிவு சான்றிதழை புதுப்பிக்க ரூ.600ல் இருந்து ரூ.5 ஆயிரம் என உயர்வு

இருசக்கர வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1,000 என உயர்வு

ஆட்டோ போன்ற வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 என உயர்வு

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ல் இருந்து ரூ.10 ஆயிரம் என உயர்வு

இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரூ.5 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.40 ஆயிரம் என உயர்வு