வாகன இன்சூரன்ஸ் தொகை இவ்வளவு உயர்வா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வாகனங்களுக்கான காப்பீடு தொகை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் இது குறித்த அறிவிப்பில் மின்சக்தியில் இயங்கும் கார்கள் இருசக்கர வாகனங்களும் வர்த்தக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு வாகன காப்பீடு தொகை உயர்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்ட வாகன காப்பீடு தொகை முழு விவரங்கள்:

இருசக்கர வாகனங்கள்:

150-350 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.1366
350 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.2804

கார்கள்

1000 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 2094
1000-1500 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 3416
1500 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 7879