shadow

images (1)

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – கால் கிலோ

வெங்காயம் – 1

கேரட் – சிறிதளவு

பீன்ஸ் – 50 கிராம்

குடை மிளகாய் -1

பச்சைப் பட்டாணி – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

பனீர் – சிறிதளவு

மிளகுத் தூள் -1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியைப் பதமாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெயை ஊற்றி, நறுக்கிய காய்கறி, பனீர் சேர்த்து இரண்டு நிமிடம் வேகவிடுங்கள். பிறகு அவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடுங்கள். சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் வதக்கி வைத்த காய்கறிகள், பனீா், உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

கடைசியாக மிளகுத் தூளைத் தூவி, கிளறுங்கள். கொத்தமல்லி தூவி, பரிமாறுங்கள். அசைவம் சேர்க்க விரும்பினால் கோழிக்கறியைப் பொடியாக நறுக்கி, வேகவைத்துச் சேர்க்கலாம். சுவை அருமையாக இருக்கும்.

Leave a Reply