shadow

வேதாளம். திரைவிமர்சனம்  மாஸ் எண்ட்ர்டெயின்மெண்ட் படம்
vedhalam review
அஜித்,ஸ்ருதிஹாசன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘வேதாளம்’ திரைப்படத்தின் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை இப்போது பார்ப்போம்.

கொல்கத்தா ரயில் நிலையத்தில் அப்பாவியாக தங்கை லட்சுமிமேனனுடன் இறங்குகிறார் அஜீத். தங்கையை அந்த ஊரின் ஒரு மிகப்பெரிய கல்லூரியில் சேர்த்துவிட்டு, டாக்சி நிறுவனத்தின் ஓனரான சூரியிடம் டாக்சி டிரைவராக வேலைக்கு சேருகிறார். இந்நிலையில் பெண்களை கடத்தி விற்பனை செய்யும் சமூக விரோதி கும்பலின் ஆள் ஒருவரை அஜீத், போலீசில் காட்டி கொடுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பலின் தலைவன், அஜீத்தை கடத்தி வர சொல்கிறார். அஜீத்தை கடத்தி வந்தபின்னர்தான் அவர் அப்பாவி இல்லை என்றும், அந்த சமூக விரோத கும்பலை அழிக்க வந்த ‘வேதாளம்’ என்றும் தெரியவருகிறது. இதன்பின்னர் அஜீத்துக்கும் ராகுல்தேவ் தலைமையிலான கும்பலுக்கும் நடைபெறும் போராட்டம்தான் மீதிக்கதை.

அஜீத் ஒரு மாஸ் எண்டர்டெய்னராக இந்த படத்தில் தோன்றுகிறார். அப்பாவியாக, கள்ளங்கபடம் இல்லாத சிர்ப்பில் அறிமுகம் ஆகும் அவர், ஆக்சன் பாதைக்கு மாறிய பின்னர் ‘தெறிக்க விடலாமா’ என்று பிரமிக்க வைக்கின்றார். அஜீத்தின் படங்களிலேயே இது பெஸ்ட் படம் என்றும், ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல் அஜீத்துக்கு ஒரு ‘வேதாளம்’ என்றும் கூறலாம்., அந்த அளவுக்கு நடிப்பில் மிரட்டியுள்ளார்.

ஸ்ருதிஹாசனை இந்த படத்தில் எதற்கு புக் செய்தார்கள் என்றே தெரியவில்லை. இவர் தோன்றும் காட்சிகள் அனைத்துமே படத்திற்கு தேவையில்லாத காட்சிகள். ஆனால் இதற்கு நேர்மாறான கேரக்டரில் லட்சுமிமேனன் நடித்துள்ளார். கொல்கத்தா காட்சிகளிலும், பிளாஷ்பேக் வேதாளம் காட்சிகளிலும் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடைசிவரை தனது அண்ணன் ஒரு அப்பாவி என்பதை அவர் நம்புவதை நமக்கு நம்ப கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.

சூரி, வித்யூலேகா ராமன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, பாலாசரவணன், ஆதித்யா டிவி புகழ் பாப்பா, ஆகியோர்கள் இருந்தும் காமெடிக்கு பஞ்சமாக உள்ளது. அஸ்வின் ஒருசில காட்சிகளில் தோன்றி லட்சுமிமேனனை கைப்பிடிக்கின்றார்.

ராகுல்தேவ், கபீர்சிங், ஆகியோர்களின் வில்லத்தனமான நடிப்பு மிரளவைக்கின்றது. தம்பிராமையாவின் வித்தியாசமான கேரக்டர் மனதை கவர்கிறது.

அனிருத்தின் இசையில் வீர விநாயகா, ஆலுமா டோலுமா பாடல் கலக்கலாக உள்ளது. பின்னணி இசையில் உண்மையிலேயே தெறிக்க வைத்துள்ளார். அஜீத்தின் பக்கா ஆக்சன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தது இவருடைய பின்னணி இசைதான்.

மேலும் ஸ்டண்ட் சில்வா, தனது அதிகபட்ச உழைப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். ஆக்சன் காட்சிகள் அனைத்துமே மாஸ். ஸ்டண்ட் காட்சிகளுக்காக படக்குழுவினர் அனைவரும் மிகுந்த சிரத்தை எடுத்துள்ளது திரையில் தெரிகிறது.

ஆரம்பகாட்சிகளிலும், வேதாளம் பிளாஷ்பேக் காட்சிகளும் எடிட்டர் ரூபன் கொஞ்சம் கத்தரியை வைத்திருக்கலாம். ஒளிப்பதிவில் நல்ல தரம்

மொத்தத்தில் ‘வேதாளம்’ ஒரு பக்கா மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படம்

Leave a Reply