9

 

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐந்து தொகுதிகள் வரை தங்கள் கட்சிக்கு கேட்டது. ஆனால் திமுக தலைமை சிதம்பரம் தொகுதியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. வேறு வழியில்லாமல் வருத்தத்தோடு இந்த ஒரு தொகுதிக்கு சம்மதிக்கிறோம் என நேற்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் நேற்று கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உருவ பொம்மைகளை எரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் திமுக தலைமை கடும் கோபத்தில் உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், திண்டிவனம் பஸ் நிலையம் அருகிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் உருவபொம்மைகளை எரித்தனர். கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply