அதிமுகவுடன் நெருங்குகிறதா விடுதலைசிறுத்தைகள்: திருமாவளவன் விளக்கம்

அதிமுகவுடன் நெருங்குகிறதா விடுதலைசிறுத்தைகள்: திருமாவளவன் விளக்கம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பதை ஊகிக்க முடியாத அளவுக்கு தற்போதைய நிலை உள்ளது.

இந்த நிலையில் அதிமுகவுடன் திருமாவளவன் நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் விழாவில் அழைத்தால் பங்கேற்பேன் என தெரிவித்த திருமாவளவனுக்கு பாராட்டுகள் என அமைச்சர் ஜெயகுமார் இன்று நடந்த விழா ஒன்றில் பேசியபோது தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியபோது, ‘அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் நெருங்கி வரவில்லை என்றும், எம்ஜிஆர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் அவரது விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply