shadow

வாட்டாள் நாகராஜ் கைது. பெங்களூரில் திரும்புகிறது சகஜநிலை

vattalகன்னட மக்களிடம் கலவர உணர்வை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜை நேற்று கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர்.

இனிமேல் பெங்களூரில் எந்த போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என காவல்துறை தலைவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாண்டியா ரயில் நிலையம் அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வாட்டாள் நாகராஜை கடக்கி போலீஸார் கைது செய்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பின் உறுப்பினர்களும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். எனினும், இந்த ரயில் மறியல் காரணமாக ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் வழக்கம் போல் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தின் அனைத்து ரயில்களும் இயங்கி வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரும், துணை ராணுவ அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் பெங்களூரில் சகஜ நிலை திரும்பியுள்ளது.

Leave a Reply