’மாஸ்டர்’ புதிய அப்டேட்டால் கடுப்பாகிய அஜித் ரசிகர்கள்

’மாஸ்டர்’ புதிய அப்டேட்டால் கடுப்பாகிய அஜித் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து விஜய் ரசிகர்களை உற்சாகமாக்கி வருகிறது. ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கெஞ்சி கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களை இது வெறுப்பேற்றி வருகிரது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ’வாத்தி இஸ் கம்மிங்’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக சற்று முன்னர் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் பாடலான விஜய் பாடிய ஒரு குட்டி கதை பாடலை போலவே இந்த ‘வாத்தி’ பாடலையும் உலக அளவில் பிரபலமாக்க விஜய் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply