பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பதாக டெல்லி முதல் அறிவித்துள்ளதால் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 8 குறைந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது என்பதும் இதனை அடுத்து ஒரு சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டெல்லி அரசு பெட்ரோல் மீதான வாட் வரி ரூபாய் 8 குறைத்துள்ளதால் டெல்லியில் நாளை முதல் பெட்ரோல் விலை ரூபாய் 8 குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.