shadow

’வாரிசு படத்தை பார்த்து அழுதேன்: தமன் உருக்கம்

தளபதி விஜய் நடித்த ’வாரிசு திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்து நான் ஏமோஷனல் காட்சிகளின்போது அழுதேன் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தமன் தனது குடும்பத்துடன் ’வாரிசு படத்தைப் பார்த்ததாகவும் இந்த படம் தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் ’வாரிசு திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்,ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை வம்சி இயக்கி உள்ளார்